பெண்கள் அணியும் தாலியின் மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்

Image

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள், தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.

சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்தபெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி

அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர்.நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாகமாறியிருக்கிறது.பதினோராம்நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்

பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

1.தெய்வீகக் குணம்,

2.தூய்மைக் குணம்,

3.மேன்மை,தொண்டு,

4.தன்னடக்கம்,

5.ஆற்றல்,

6.விவேகம்,

7.உண்மை,

8.உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.

9.மேன்மை

இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது

கலர் பிலிமை கண்டு பிடித்த ஈஸ்ட்மேன்

திரைப்படங்களில் ஈஸ்ட்மேன் கலர் என்று போடப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள். கமேராவில் கோடாக் பிலிம் என்று போடப்பட்டிருப்பதையும் பார்ப்பீர்கள். இவற்றைக் கண்டு பிடித்தவர்தான் ஈஸ்ட்மேன்.

1854 ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள வாட்டர் வில்லா என்ற இடத்தில் யூலை 12ம் திகதி இவர் பிறந்தார். அக்காலத்தில் புகைப்படம் எடுப்பது பெரும் செலவு கொண்ட விடயமாக இருந்தத

ு. இதைக் குறைத்து எளிமையாக படம் எடுக்கும் வழியை கண்டறிவதாக சபதமெடுத்தார். இதன் பயனாக 1884ல் அவர் பிலிம் ரோலை கண்டு பிடித்தார். தொடர்ந்து 1888ல் எளிதாக இயங்கும் கமேராவை கண்டு பிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர்தான் கோடாக். 1897 ல் பாக்கட்டில் வைத்துச் செல்லும் கமேராவை கண்டு பிடித்தார். 1898 ல் மடித்து செல்லும் கமேராவை கண்டு பிடித்தார். 1928 ல் சினிமாவிற்கான கலர் பிலிமை அறிமுகம் செய்தார். கமேராவில் முதன் முதலில் பிளாஸ் பயன்படுத்தியவரும் இவர்தான். பெரும் புகழும் பணமும் சம்பாதித்த இவர்தான் தொழிலாளிகளுக்கு இலாபத்தில் பங்கு கொடுத்தவராகும்.

இவருடைய வாழ்க்கையில் நாம் காணும் உண்மை சபதம்தான். மற்றவரை அழிக்க வேண்டும் என்று சபதமெடுக்காமல், ஆக்க சக்திக்காக சபதமெடுத்தார் என்பதுதான். சபதம் எடுங்கள் நல்ல செயல்களுக்காக மட்டும். இறைவன் உங்களுக்கு ஈஸ்ட்மேனுக்கு கொடுத்தது போல வெற்றியைத் தருவார்.